10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்பதை கண்டித்து போராட்டம் மணப்பாறை பால் கூட்டுறவு சங்கம் முன் நடந்தது

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் 10 ரூபாய் நாணயம் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. ஆனால் இந்த நாணயத்தை கடைகளிலோ, பஸ்களிலோ அல்லது பால் கூட்டுறவு சங்கத்திலோ வாங்குவது கிடையாது. மேலும் வங்கிகளில் 10 ரூபாய் நாணயத்தை கொண்டு சென்றாலும் அலைக்கழிக்கின்ற சூழ்

Update: 2016-12-27 21:45 GMT

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் 10 ரூபாய் நாணயம் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. ஆனால் இந்த நாணயத்தை கடைகளிலோ, பஸ்களிலோ அல்லது பால் கூட்டுறவு சங்கத்திலோ வாங்குவது கிடையாது. மேலும் வங்கிகளில் 10 ரூபாய் நாணயத்தை கொண்டு சென்றாலும் அலைக்கழிக்கின்ற சூழ்நிலையும் தொடர்கதையாக நிகழ்ந்து வருகின்றது. இதுபோன்று பலராலும் 10 ரூபாய் நாணயம் வாங்காமல் புறக்கணிக்கப்படுவதால் அது செல்லுமா? செல்லாதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் கடந்த சில தினங்களாக நிலவி வருகின்றது. மேலும் சிலர் இந்த சந்தேகத்தை போக்கிடும் வகையில் 10 ரூபாய் நாணயம் செல்லும் என்று துண்டு பிரசுரமும் அச்சிட்டு வெளியிட்டு உள்ளனர்.ஆகவே 10 ரூபாய் நாணயம் அனைத்து இடங்களிலும் வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வாங்க மறுப்பதை கண்டித்தும் மணப்பாறை பால்கூட்டுறவு சங்கம் முன்பு அமர்ந்து ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மக்கள் மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் ராஜ்குமார் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் வருவாய்துறையினரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்