பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிலாளர் நல நிதியை ஜனவரி 31–ந் தேதிக்குள் செலுத்தாவிட்டால் நடவடிக்கை அதிகாரி தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிலாளர் நல நிதியை வருகிற ஜனவரி 31–ந் தேதிக்குள் செலுத்தாவிட்டால் அபராத வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். தொழிலாளர் நலநிதி பெரம்பலூர் தொழிலாளர் ஆய்வாளர் பாலதண்டாயுத

Update: 2016-12-27 22:15 GMT

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிலாளர் நல நிதியை வருகிற ஜனவரி 31–ந் தேதிக்குள் செலுத்தாவிட்டால் அபராத வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் நலநிதி

பெரம்பலூர் தொழிலாளர் ஆய்வாளர் பாலதண்டாயுதம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நர்டு தொழிலாளர் நலவாரிய செயலாளர் அறிவுரையின்படி, தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், 5 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கும் கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் குறைந்த பட்சம் 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்திருந்தால், ஒவ்வொரு தொழிலாளிக்கும் அரசுஉத்தரவின்படி தொழிலாளியின் பங்காக ரூ.10–ஐ அவர்களது டிசம்பர் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்து அந்த தொகையுடன் வேலைஅளிப்பவர் பங்காக ரூ.20–ம் சேர்த்து ஆக மொத்தம் ரூ.30–வீதம் தொழிலாளர் நல நிதிக்கு பங்குத்தொகையாக அந்தந்த நிர்வாகம் செலுத்த வேண்டும்.

நடவடிக்கை

அதன்படி 2016–ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியை வருகிற ஜனவரி மாதம் 31–ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். தொழிலாளர் நல நிதி செலுத்த தவறும் நிறுவனங்கள் மீது தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டப்பிரிவு 28–ன்படி வருவாய் வரிவசூல் சட்டத்தின்படி அந்த தொகையை அபராத வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே 2016–ம் ஆண்டிற்கான தொழிலாளர் நலநிதி தொகையை செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் என்ற பெயருக்கு வங்கி வரைவோலை எடுத்து அதனை வருகிற ஜனவரி மாதம் 31–ந்தேதிக்குள் செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை–6 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்