போடி அருகே ஆசிரியை வீட்டுக்குள் புகுந்த நல்லபாம்பு தீயணைப்பு படையினர் பிடித்தனர்

தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள தர்மத்துப்பட்டி கிராமத்தில் அரசு பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் மாணவர் விடுதிக்கு செல்லும் சாலையில் செந்தில்வடிவு என்பவருடைய வீடு உள்ளது. இவர் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய வீட்டின் உள்ளே தண்

Update: 2016-12-27 22:15 GMT

போடி,

தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள தர்மத்துப்பட்டி கிராமத்தில் அரசு பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் மாணவர் விடுதிக்கு செல்லும் சாலையில் செந்தில்வடிவு என்பவருடைய வீடு உள்ளது. இவர் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய வீட்டின் உள்ளே தண்ணீர்தொட்டி பகுதியில் பாம்பு ஒன்று புகுந்து இருப்பதை பார்த்தனர். இது குறித்து போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரவி தலைமையில் படைவீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு இருந்த சுமார் 5 அடி நீளமுள்ள நல்லபாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த பாம்பை போடி அருகேயுள்ள வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.

மேலும் செய்திகள்