அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை கூடலூர் பகுதியில் உள்ள அரசு நிலங்களில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நீதிமன்ற உத்தரவ

Update: 2016-12-27 22:30 GMT

கூடலூர்,

அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

கூடலூர் பகுதியில் உள்ள அரசு நிலங்களில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படி இந்து கோவில்களில் உள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கியை போலீசார் அகற்றிய நிலையில் பிற வழிபாட்டு தலங்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் அகற்ற வில்லை. எனவே அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பாரபட்சமின்றி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் ஆபத்தான மரங்கள் என்ற போர்வையில் விலை உயர்ந்த ஈட்டி மரங்கள் வெட்டப்பட்டு கேரளாவுக்கு கடத்துவதை தடுக்க வேண்டும்.

கூடலூரில் மக்கள் பயன்பாட்டுக்கு போதிய அளவு ஆட்டோக்கள் இயக்கப்படுகின்ற நிலையில் விதிமுறைகளை மீறி கூடுதலாக புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. செம்பாலா பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பெரிய வணிக வளாகம் கட்டுவதை தடுத்து நிறுத்த கோரியும் கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் சிவச்சந்திரன் தலைமை தாங்கினார். நகர தலைவர் அனில்குமார், நகர செயலாளர் பிரஜோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்தன், பா.ஜ.க. பிரசார அணி மாவட்ட செயலாளர் பி.ஏ.சாமி, பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் நளினி சந்திரசேகர் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்