கூத்தாநல்லூர் அருகே தண்ணீரின்றி பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை மாடுகளை மேயவிடும் அவலம்

கூத்தாநல்லூர் அருகே தண்ணீரின்றி பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும், பயிர்களை மாடுகளை விட்டு மேயவிடுகின்றனர். கருகும் பயிர்கள் திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள பழையனூரில் சுமார் 500 விவசாயிகள் 700 ஏக்கர் விவசாய நிலத்த

Update: 2016-12-27 17:14 GMT

கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் அருகே தண்ணீரின்றி பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும், பயிர்களை மாடுகளை விட்டு மேயவிடுகின்றனர்.

கருகும் பயிர்கள்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள பழையனூரில் சுமார் 500 விவசாயிகள் 700 ஏக்கர் விவசாய நிலத்தில் சம்பா சாகுபடி செய்து இருந்தனர். மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாதபோது இப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்வதில் ஆர்வலம் காட்டாமலே இருந்து வந்தனர். பின்னர் மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் வரத்து அதிகமானதால் முழுமையான அளவு தண்ணீர் கிடைக்கும். மேலும் மழையும் பெய்யும் என்கிற நம்பிக்கையில் முழுமுனைப்புடன் சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஆற்றில் தொடர்ந்து தண்ணீரும் வரவில்லை. பருவமழையும் போதிய அளவு பெய்யவில்லை. இதனால் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கவலை அடைந்த விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஆற்றில் இருந்து தண்ணீரையும் பம்புசெட் மூலமாக வயலுக்கு பாய்ச்சினர். தற்போது ஆற்றிலும் முழுமையாக தண்ணீர் வற்றி போனதால் பம்புசெட் மூலமும் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து விவசாயிகள் தங்களது வயலில் பயிர்களை மாடுகளை மேய விடுகின்றனர்.

விவசாயிகள் கவலை

இதுகுறித்து பழையனூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:– 700 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் முழுமையாக கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. வயல்கள் வறண்டு, வெடிப்பும் ஏற்பட்டுள்ளது. பருவமழை பொய்த்து போனது. மேலும், நாடா புயல், வார்தா புயல் உருவானபோது கூட மழை பெய்யவில்லை. தொடர்ந்து வறண்ட வானிலையே நிலவுவதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இதனால் 500 விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்