மோகனூர் அருகே பிளஸ்–1 மாணவி 2–வது முறையாக கடத்தல் கூலித்தொழிலாளிக்கு வலைவீச்சு
மோகனூர் அருகே உள்ள என்.புதுப்பட்டி ஊராட்சி மேலப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது23). கூலித்தொழிலாளி. அந்த பகுதியில் உள்ள தொட்டிப்பட்டியை சேர்ந்த 16 வயது மாணவி அணியாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார். இவரை நேற்று முன்தினம் மணிகண்டன
மோகனூர்,
மோகனூர் அருகே உள்ள என்.புதுப்பட்டி ஊராட்சி மேலப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது23). கூலித்தொழிலாளி. அந்த பகுதியில் உள்ள தொட்டிப்பட்டியை சேர்ந்த 16 வயது மாணவி அணியாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார். இவரை நேற்று முன்தினம் மணிகண்டன் கடத்தி சென்று விட்டதாக மாணவியின் தாயார் மோகனூர் போலீசில் புகார் செய்து உள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை வலைவீசி தேடி வருகிறார்.
இந்த மாணவியை கடந்த ஜனவரி மாதம் மணிகண்டன் ஏற்கனவே ஒருமுறை கடத்தி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை மீட்டனர். இந்த வழக்கு இன்னும் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தற்போது மணிகண்டன் 2–வது முறையாக மாணவியை கடத்தி சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.