கும்பகோணம் பகுதியில் மதுபானம் விற்ற 3 பேர் கைது 312 மதுபாட்டில்கள் பறிமுதல்
கும்பகோணம் பகுதியில் மதுபானம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 312 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை திறப்பதற்கு முன்பே... கும்பகோணம் பகுதியில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன்பே, மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்ப
கும்பகோணம்,
கும்பகோணம் பகுதியில் மதுபானம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 312 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடை திறப்பதற்கு முன்பே...கும்பகோணம் பகுதியில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன்பே, மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தஞ்சை மாவட்ட கலால் துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் தஞ்சை கலால் துறை உதவி ஆணையா இன்னாசிமுத்து, கோட்ட கலால் அலுவலா மனோகரன் ஆகியோரை கொண்ட குழுவினர் நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு அருகே சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது திருமண்டங்குடி, திருக்கருக்காவூர் இடையிருப்பு ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் மதுபானம் விற்றதாக பாபநாசம் சன்னதி தெருவை சோந்த பிரபு (வயது35), பிரகாஷ்(25), பாபநாசம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் அம்மாப்பேட்டை கழத்தெருவை சோந்த ஜான்ஜெயக்குமார் (40) ஆகிய 3 பேர் பிடிபட்டனர்.
312 மதுபாட்டில்கள்இவர்கள் 3 பேரையும் கும்பகோணம் மது விலக்கு அமல்பிரிவு போலீசாரிடம் கலால் துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 312 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.