தஞ்சையில் 2,092 பேருக்கு திருமண நிதிஉதவி–தாலிக்கு தங்கம் கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்

தஞ்சையில் 2,092 பேருக்கு திருமணநிதிஉதவி–தாலிக்கு தங்கத்தை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார். திருமண நிதிஉதவி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சமூக நலத்துறையின் மூலம் திருமண நிதிஉதவி வழங்கும் திட்டத்தின் கீழ் திருமண நிதிஉதவி மற்றும் தாலிக்கு தங்க

Update: 2016-12-27 23:00 GMT

தஞ்சாவூர்,

தஞ்சையில் 2,092 பேருக்கு திருமணநிதிஉதவி–தாலிக்கு தங்கத்தை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்.

திருமண நிதிஉதவி

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சமூக நலத்துறையின் மூலம் திருமண நிதிஉதவி வழங்கும் திட்டத்தின் கீழ் திருமண நிதிஉதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி, 2,092 பேருக்கு திருமண நிதிஉதவியையும், தாலிக்கு தங்கத்தையும் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ஏழை, எளிய பெண்கள் பயன்பெறும் திட்டமாக இருப்பதால் தொடர்ந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பொருளாதார நிலை

இந்த திட்டத்தால் கிராமப்புறங்களில் ஏழை, எளிய மக்கள் தங்களுடைய பெண் குழந்தைகளை பட்டப்படிப்பு வரை படிக்க வைக்கின்றனர். பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படுகிறது.

12–ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படுகிறது. இன்றைக்கு(நேற்று) 1,879 பேருக்கு தலா ரூ.50 ஆயிரத்துடன் தாலிக்கு தங்கமும், 213 பேருக்கு தலா ரூ.25 ஆயிரத்துடன் தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கிராமப்புற மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். ஏழை, எளிய மக்கள் தங்களுடைய பொருளாதார நிலையை உயர்த்தி கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பரசுராமன் எம்.பி., ரெங்கசாமி எம்.எல்.ஏ., மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், சமூக நலத்துறை அலுவலர் பாக்கியலட்சுமி, மாவட்ட பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் உதயகுமார், செய்தி–மக்கள் தொடர்பு அலுவலர் சிங்காரம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்