நெல்லிக்குப்பம் அருகே அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து

நெல்லிக்குப்பம் அருகே அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானார். அவர் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. நண்பர்கள் நெல்லிக்குப்பம் நடேசன் தெருவை சேர்ந்தவர் காஜாமொய்தின். இவருடைய மகன் அப்துல்ரகுமான்(வயது 20). இவர்;

Update:2016-12-28 04:15 IST

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அருகே அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானார். அவர் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

நண்பர்கள்

நெல்லிக்குப்பம் நடேசன் தெருவை சேர்ந்தவர் காஜாமொய்தின். இவருடைய மகன் அப்துல்ரகுமான்(வயது 20). இவர் கடலூரில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வந்தார். இவரும், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த முகமதுஅன்சாரி மகன் பெரோஸ்கான்(22) என்பவரும் நண்பர்கள். பெரோஸ்கான் துபாயில் வேலை செய்து வருகிறார். சமீபத்தில் விடுமுறையில் துபாயில் இருந்து பெரோஸ்கான் நெல்லிக்குப்பத்துக்கு வந்தார்.

இந்த நிலையில் அப்துல்ரகுமானும், பெரோஸ்கானும் நேற்று காலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் நெல்லிக்குப்பத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்தனர். கீழ்பட்டமாம்பாக்கம் அருகே வந்தபோது, முன்னாள் உளுந்தூர்பேட்டையில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பஸ்சை முந்திச்செல்ல முயன்றனர். அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் விழுந்தது.

பலி

இதில் அப்துல்ரகுமான், அரசு பஸ்சின் பின்புற சக்கரத்தில் சிக்கி பலியானார். பெரோஸ்கான் படுகாயமடைந்தார். இது குறித்த தகவலின் பேரில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமநாதன், சப்–இன்ஸ்பெக்டர் ஜெயதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அப்துல் ரகுமானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயமடைந்த பெரோஸ்கான், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்