சேலம் கலெக்டர் அலுவலகத்தை 2–வது நாளாக விவசாயிகள் முற்றுகையிட்டு சாலை மறியல் பெண்கள் உள்பட 25 பேர் கைது
சேலம் கலெக்டர் அலுவலகத்தை 2–வது நாளாக விவசாயிகள் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி 25 பேர் கைது செய்யப்பட்டனர். 2–வது நாளாக போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் இணைந்து மாநிலம் முழுவதும்
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தை 2–வது நாளாக விவசாயிகள் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
2–வது நாளாக போராட்டம்தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் இணைந்து மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது. அதன்படி விவசாயிகள் அமைப்புகள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பெண்கள் உள்பட 55 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் நேற்று 2–வது நாளாக சேலம் மாவட்ட தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட கண்ணன், சேலம் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் ராமசாமி ஆகியோர் தலைமையில் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
இழப்பீடு வழங்க வேண்டும்இது தொடர்பாக சேலம் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் ராமசாமி கூறுகையில், பருவமழை பொய்த்து வருகிறது. இதன் காரணமாக வறட்சி ஏற்பட்டுள்ளது. இதையொட்டி நிலங்களில் கருகிய பயிர்களை கண்டு விவசாயிகள் நாள்தோறும் உயிரிழந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடந்த போராட்டத்தில் விவசாயி மகாலிங்கம் உயிரிழந்தார். அவருடை குடும்பத்தினருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.