ஓட்டப்பிடாரம் அருகே வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம்

ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை பஜாரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில், வருவாய் துறை அதிகாரிகள் சார்பில் நிலம் அளவு செய்யும் பணி நடந்தது. இந்த நிலையில் அதிகாரிகள் முறையாக நிலத்தை அளவு செய்யவில்லை. அவர்கள் மீண்டும் நி

Update: 2016-12-27 20:00 GMT

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை பஜாரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில், வருவாய் துறை அதிகாரிகள் சார்பில் நிலம் அளவு செய்யும் பணி நடந்தது. இந்த நிலையில் அதிகாரிகள் முறையாக நிலத்தை அளவு செய்யவில்லை. அவர்கள் மீண்டும் நிலத்தை அளவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை கண்டித்தும் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு ஐக்கிய வியாபாரிகள் சங்க தலைவர் சோலைசாமி தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் வியாபாரிகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்