சிவந்தி கோப்பைக்கான கபடி; தபால், தந்தி அணி வெற்றி

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தில், சிவந்தி கோப்பைக்கான தென்னிந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த காவல் துறை அணியினர், தபால், தந்தி அணியினர், கேரள ராணுவ அணி மற்ற;

Update: 2016-12-27 22:15 GMT

ராஜபாளையம்,

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தில், சிவந்தி கோப்பைக்கான தென்னிந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த காவல் துறை அணியினர், தபால், தந்தி அணியினர், கேரள ராணுவ அணி மற்றும் கர்நாடக ராணுவ அணியை சேர்ந்தவர்கள் என 13 அணிகள் கலந்து கொண்டன. இதில் அரையிறுதிப் போட்டியின் முதல் போட்டியில் ஹைடெக் சென்னை அணியினர் தங்களை எதிர்த்து ஆடிய சென்னை நண்பர்கள் அணியினரை வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர். அடுத்ததாக நடைபெற்ற போட்டியில் தமிழக தபால், தந்தி அணியினர் தங்களை எதிர்த்து ஆடிய சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக அணியினரை வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இறுதிப் போட்டியில் தபால், தந்தி அணியினர் 16 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றனர். வெற்றி பெற்ற அணிக்கு சிவந்தி சுழற்கோப்பையும், 50 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. மேலும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு தனி நபர் பரிசாக, சிவந்தி ஆதித்தனார் பெயரில் தங்க நாணயமும் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்