மானாமதுரை ஆனந்தவல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் கோவை ஆதினம் பார்வையிட்டார்

மானாமதுரையில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி சோமநாதர் கோவில் கும்பாபிஷேக பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகின்றன. கோவிலுக்கு வரும் நிதிகள் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் கோவில் கும்பாபிஷேக பணிக்கு பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஏராளமானோர் நன்கொடை க

Update: 2016-12-27 22:30 GMT

மானாமதுரை,

மானாமதுரையில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி சோமநாதர் கோவில் கும்பாபிஷேக பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகின்றன. கோவிலுக்கு வரும் நிதிகள் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் கோவில் கும்பாபிஷேக பணிக்கு பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஏராளமானோர் நன்கொடை கொடுத்து வருகின்றனர். கோவிலின் அறக்கட்டளை உறுப்பினர்களும் அதற்கான வேலைகளை செய்து வருகின்றனர். இந்தநிலையில் கோவை காமாட்சிபுரி ஆதின சுவாமிகள் ஆனந்தவல்லியம்மன் கோவிலுக்கு வருகை தந்தார். அவரை எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி தலைமையில் பக்தர்கள் வரவேற்றனர். பின்னர் அவர் கும்பாபிஷேக பணிகளை பார்வையிட்டார். அதன்பின் கோவை ஆதின சுவாமிகள் பேசும்போது, மானாமதுரை ஆனந்தவல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகின்றன. நிதி கொடுக்கும் அனைவரும் வணக்கத்துக்குரியவர்கள் என்றும், பணிகள் முடிவதற்கு என்னால் முயன்ற உதவிகள் செய்வேன் என்று கூறினார். மேலும் கும்பாபிஷேக வேலைகளுக்கு தேவையான நிதிகளை எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடியும் திரட்டி வருகிறார். கோவை ஆதின சுவாமிகள் வருகையையொட்டி, கோவில் அறக்கட்டளை தலைவர் தொழிலதிபர் நடராஜன், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜிபோஸ், அறக்கட்டளை உறுப்பினர் சங்கர சுப்பிரமணியன், ஜெ.பேரவை வார்டு செயலாளர் நமச்சிவாயம், கோவில் சிற்பி சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்