கீழ்பென்னாத்தூர் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் அகற்றம்

கீழேபென்னாத்தூர் அருகே ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள், பயிரிடப்பட்டிருந்த நெல், உளுந்து பயிர்கள் ஆகியவை பொக்லைன் மூலம் அகற்றப்பட்டன. குளம் புறம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு கீழ்பென்னாத்தூர் தாலுகா பூதமங்கலம் மதுரா, துர்கம் கிராமத்தில் குள

Update: 2016-12-27 22:45 GMT

கீழ்பென்னாத்தூர்,

கீழேபென்னாத்தூர் அருகே ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள், பயிரிடப்பட்டிருந்த நெல், உளுந்து பயிர்கள் ஆகியவை பொக்லைன் மூலம் அகற்றப்பட்டன.

குளம் புறம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு

கீழ்பென்னாத்தூர் தாலுகா பூதமங்கலம் மதுரா, துர்கம் கிராமத்தில் குளம் புறம்போக்கு இடத்தை அதே ஊரை சேர்ந்த லட்சுமணண், கண்ணன் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அங்கு மாட்டு கொட்டகை, குளியல் அறை, சமையல் கூடம், தங்கும் அறை கட்டியிருந்தனர். மேலும் ஆக்கிரமிப்பு இடத்தில் வைக்கோல் போர் அமைத்தும் உளுந்து, நெற்பயிர்கள் பயிரிட்டு வந்தனர்.

குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என துர்கம் கிராம மக்கள் தாசில்தார், கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை விசாரித்த மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அதன்பேரில் கீழ்பென்னாத்தூர் தாசில்தார் முருகன், துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு ஆகியோர் முன்னிலையில் குளம் புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

மாட்டு கொட்டகை, குளியல் அறை, சமையல் கூடம், தங்கும் அறை ஆகியவை பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டது. மேலும் ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த உளுந்து, நெற்பயிர்களும் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் மங்கலம் போலீசார் ஈடிபட்டிருந்தனர்.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது தாலுகா துணை நில அளவர் செந்தில், வருவாய் ஆய்வாளர் தனபால், கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் (பொறுப்பு) மற்றும் கிராம உதவியாளர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்