கீழப்பாவூர் நரசிம்ம பெருமாள் கோவிலில் கொள்ளை முயற்சி அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்
பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் நரசிம்ம பெருமாள் கோவிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. கோவிலில் இருந்த அலாரம் ஒலித்ததால் கொள்ளை கும்பல் தப்பி ஓட்டம் பிடித்தது.
பாவூர்சத்திரம்,

நரசிம்ம பெருமாள் கோவில்
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் தென்காசி காசிவிசுவநாதர் கோவில் கட்டுப்பாட்டில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமைவாய்ந்த கோவில். இங்கு ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர பூஜை வெகு சிறப்பாக நடைபெறும். மேலும் தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு கோவில் அர்ச்சகர் வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்று விட்டார். நேற்று அதிகாலை கோவிலை திறக்க வந்தார். அப்போது பெருமாள் சன்னதி மற்றும் நரசிம்மர் சன்னதி கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது அதனை பார்த்த அர்ச்சகர் அதிர்ச்சி அடைந்தார்.
போலீசார் விசாரணை
மேலும் கோவிலில் இருந்த பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன. இதுதொடர்பாக கோவில் அர்ச்சகர் தென்காசி காசிவிசுவநாதர் கோவில் செயல் அலுவலர் ஜெயராமனுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
உண்டியலை உடைக்க முயற்சி
போலீசார் விசாரணையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவில் வளாகத்தில் புகுந்த கொள்ளையர்கள் கோவிலில் உள்ள பீரோக்களை உடைத்துள்ளனர். அதில் நகை, பணம் இல்லாததால் ஏமாற்றம் அடைந்து, கோவில் உண்டியலை உடைக்க முயன்றுள்ளனர். அப்போது கோவிலில் இருந்த அலாரம் ஒலித்துள்ளது. இதனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.