குடியாத்தம் உழவர் சந்தை அருகே உள்ள நடைபாதை கடைகளை அகற்றக்கூடாது வியாபாரிகள் கோரிக்கை மனு

குடியாத்தத்தில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தைக்கு வெளியே பலர் நடைபாதையில் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். அவர்கள் நேற்று கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் ‘‘நாங்கள் கடந்த 15 வருடங்களாக கடைநடத்தி வருக

Update: 2016-12-27 22:45 GMT

வேலூர்,

குடியாத்தத்தில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தைக்கு வெளியே பலர் நடைபாதையில் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். அவர்கள் நேற்று கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில் ‘‘நாங்கள் கடந்த 15 வருடங்களாக கடைநடத்தி வருகிறோம். எங்களில் பெரும்பாலானவர்கள் ஊனமுற்றவர்கள், முதியவர்கள். இந்த கடையின் மூலம் கிடைக்கும் வருவாயைகொண்டு குடும்பம் நடத்தி வருகிறோம். இந்த நிலையில் உழவர் சந்தையில் கடைவைத்துள்ள சிலர் நகராட்சி மூலம் எங்கள் கடைகளை அகற்ற முயற்சி செய்து வருகிறார்கள். அதன்படி நகராட்சியும் எங்கள் கடைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. எங்கள் கடைகளை அகற்றினால் தற்கொலை செய்துகொள்வதை தவிரவேறு வழியில்லை. எனவே கடைகளை அகற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்