கே.வி.குப்பம் ஒன்றியத்தில் 110 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ. வழங்கினார்
கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில், தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித் தொகை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, 110 பயனாளிகளுக்கு 440 கிராம் தாலிக்கு தங்கமும், திருமண உதவித் தொகையாக ரூ
குடியாத்தம்,
கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில், தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித் தொகை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, 110 பயனாளிகளுக்கு 440 கிராம் தாலிக்கு தங்கமும், திருமண உதவித் தொகையாக ரூ.39 லட்சமும் வழங்கி பேசினார். அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.எம்.ஐ.சீனிவாசன், நிர்வாகிகள் பன்னீர்செல்வம், எல்.பி.பாபு, கோபி, சுமதிவெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் வேதமுத்து வரவேற்றார்.
இதில் கட்சி நிர்வாகிகள் தேவன், சொக்கலிங்கம், கஜேந்திரன், முரளி, மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கோபி நன்றி கூறினார்.