சுனாமி நினைவு தினத்தையொட்டி ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை மீனவர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்

சுனாமி நினைவு தினத்தையொட்டி ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. மேலும் சுனாமியில் இறந்தவர்கள் மவுன அஞ்சலி மீனவர்கள் செலுத்தினர். சுனாமி கடந்த 2004–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26–ந்தேதி இந்தோனேஷியாவில் உள்ள சுமத்திரா தீவில் கடலுக்க

Update: 2016-12-26 22:49 GMT

கோட்டைப்பட்டினம்,

சுனாமி நினைவு தினத்தையொட்டி ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. மேலும் சுனாமியில் இறந்தவர்கள் மவுன அஞ்சலி மீனவர்கள் செலுத்தினர்.

சுனாமி

கடந்த 2004–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26–ந்தேதி இந்தோனேஷியாவில் உள்ள சுமத்திரா தீவில் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் சுனாமி என்னும் ஆழிப்பேரலை எழுந்து கடற்கரையோர பகுதிகளை சூறையாடியது. இதில் தமிழகத்திலும் நாகப்பட்டினம் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் உயிர் இறந்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் சுமார் 2000–க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இங்கு மீன்பிடி தொழில் செய்யும் பெரும்பாலானோர் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 2004–ம் ஆண்டு டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட சுனாமி பேரலையில் நாகை மாவட்டத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் உயிர் இழந்தனர். இதில் பெரும்பாலும் உயிரிழந்தவர்கள் ஜெகதாப்பட்டினம் பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வரும் மீனவர்களின் உறவினர்கள் ஆவார்கள்.

மவுன அஞ்சலி

இதனால் கோரத்தாண்டவம் ஆடிய சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் இன்று (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் கடலுக்கு செல்லவில்லை. மேலும் நேற்று காலை மீனவர்கள் சங்கத்தினர் சார்பில் சுனாமியால் இறந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், மீனவ சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


மேலும் செய்திகள்