புதுக்கோட்டையில் துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தினர்

புதுக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் ஜனநாயக துப்புரவு தொழிலாளர் சங்கம் புதுக்கோட்டை கிளையின் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2016-12-26 22:47 GMT

புதுக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

ஜனநாயக துப்புரவு தொழிலாளர் சங்கம் புதுக்கோட்டை கிளையின் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பஞ்சவர்ணம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் விடுதலை குமரன், மாவட்ட பொறுப்பாளர் பழ.ராஜா கோரிக்கையை விளக்கி பேசினர். இதில் துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பிடத்தடையாய் உள்ள, நகராட்சி வருமானத்தில், சம்பளச் செலவு, 49 சதவீதத்திற்கு மேல்செல்லக்கூடாது என்கின்ற விதியை ரத்து செய்ய வேண்டும்.

புதிய தள்ளு வண்டி

5 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சியுடன் இணைக்கப்பட்ட புதுக்கோட்டை ஊராட்சியில் இருந்து வந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். குப்பை வாங்குவதற்கான புதிய தள்ளு வண்டிகளையும், அகப்பை மிளார், கூடை, செருப்பு போன்றவற்றையும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மேலும் செய்திகள்