பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி
ஜெயங்கொண்டம் வட்டார வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ்(அட்மா) விவசாயிகளுக்கு, பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்ப்பு குறித்து மாவட்ட அளவிலான பயிற்சி வீரசோழபுரம் கிராமத்தில் நடைபெற
மீன்சுருட்டி,
ஜெயங்கொண்டம் வட்டார வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ்(அட்மா) விவசாயிகளுக்கு, பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்ப்பு குறித்து மாவட்ட அளவிலான பயிற்சி வீரசோழபுரம் கிராமத்தில் நடைபெற்றது. பயிற்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரகாசம் தலைமை தாங்கினார். மீன்வளத்துறை ஆய்வாளர் ஞானம் முன்னிலை வகித்து பேசினார். அவர் பேசுகையில், மீன்களின் பல்வேறு ரகங்கள், அவற்றில் அடங்கியுள்ள சத்துக்கள் விவரம், பண்ணைக்குட்டைகளில் மீன் குஞ்சுகள் இட்டவுடன் பராமரிக்க வேண்டிய முறைகள், நீர்நிலைகளில் வெவ்வேறு நீர் மட்டங்களில் வளரக்கூடிய பல ரக மீன்களை ஒரே பண்ணைக் குட்டையில் வளர்க்கும்முறை, இதன் மூலம் அதிக வருவாய் ஈட்டும் முறைகள், மீன்கள் வளர்ப்பின் போது நீர் நிர்வாகம் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். விவசாயிகளை அருகில் அமைக்கப்பட்டுள்ள மீன் வளர்க்கும் பண்ணைக்குட்டைக்கு அழைத்து செல்லப்பட்டு மீன் வளர்ப்பு முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் முருகன், சங்கீதபிரியா ஆகியோர் செய்திருந்தனர். இப்பயிற்சியில் 40 விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர் கலந்து கொண்டு பயனடைந்தனர். முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் மீனாட்சி வரவேற்று, திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.
–