‘பாஸ்போர்ட்’ விண்ணப்பம் செய்வதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் அல்ல எளிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை விளக்கி அதிகாரி அறிக்கை
1989–ம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பம் செய்யும்போது பிறப்பு சான்றிதழ் கட்டாயம் அல்ல என்று எளிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி விளக்கி அறிக்கை வெளியிட்டு உள்ளார். பிறப்பு சான்றிதழ் வெளிநாடு செல்வதற்க
திருச்சி,
1989–ம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பம் செய்யும்போது பிறப்பு சான்றிதழ் கட்டாயம் அல்ல என்று எளிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி விளக்கி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
பிறப்பு சான்றிதழ்வெளிநாடு செல்வதற்கு முக்கியமான ஆவணமாக பாஸ்போர்ட் உள்ளது. பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பம் செய்யும்போது இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களில் பிறப்பு சான்றிதழ் முக்கியமானதாகும். பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்கள் அவர்களது பிறந்த தேதியுடன் கூடிய பள்ளிக்கூட மாற்று சான்றிதழ், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 மதிப்பெண் சான்றிதழ்களை இணைத்து அனுப்பலாம். ஆனால் 26–1–1989–க்கு பின்னர் பிறந்தவர்களுக்கு இது பொருந்தாது. இந்த தேதி மற்றும் அதற்கு பின்னர் பிறந்தவர்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி அல்லது உள்ளாட்சி நிறுவனத்திடம் இருந்து பிறப்பு சான்றிதழை பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும் என்பது கட்டாயமாக இருந்து வந்தது.
தளர்த்தப்பட்டதுதற்போது மத்திய வெளியுறவு துறை பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு பல விதிமுறைகளை தளர்த்தி உள்ளது. தளர்த்தப்பட்ட விதிமுறைகளின்படி 26–1–1989க்கு பின்னர் பிறந்தவர்கள் பிறப்பு சான்றிதழ் இருந்தால் அதனை இணைக்கலாம். பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்கள் பிறந்த தேதியுடன் கூடிய பள்ளிச்சான்றிதழ் உள்ளிட்ட சில ஆவணங்களை இணைத்து விண்ணப்பம் செய்யலாம். மேலும் சில விதிமுறைகளும் தளர்தப்பட்டு உள்ளது.
அதிகாரி அறிக்கைதளர்த்தப்பட்ட மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை விளக்கி திருச்சி மண்டல பாஸ்போர்ட்டு அதிகாரி எஸ். லிங்கசாமி வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது வயதினை உறுதி செய்வதற்கு பிறப்பு சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ் மெட்ரிகுலேசன் சான்றிதழ், பான்கார்டு, ஆதார் கார்டு, இ ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, எல்.ஐ.சி பாலிசி பத்திரம், ஓய்வூதியர் அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை இணைத்து அனுப்பலாம்.
பாஸ்போர்ட் பெறுவதற்கு திருமண சான்றிதழ் தேவை இல்லை. இதற்கான அனக்சர் கே என்ற படிவமும் தேவை இல்லை. விவாகரத்து பெற்று இருக்கும் கணவனோ அல்லது மனைவியோ அதற்கான கோர்ட்டு உத்தரவை இணைக்கவேண்டியது இல்லை.
குழந்தைகள்ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்யும்போது தாய் அல்லது தந்தை அல்லது சட்டரீதியான பாதுகாவலர் ஆகியோரில் ஒருவரது பெயரைமட்டும் குறிப்பிட்டால் போதுமானதாகும். இதன் மூலம் தாயிடமோ அல்லது தந்தையிடமோ வளரும் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பது எளிதாகும். திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகள் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும்போது விண்ணப்ப படிவத்துடன் இணைப்பு படிவம் ஜி யையும் தாக்கல் செய்யவேண்டும்.இணைப்பு படிவம் ஏ, சி, டி, இ, ஜே, கே ஆகியவை இணைக்கப்படவேண்டியது இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
–