லாரி கிளீனரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர்கள் 2 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி வட்டம் மேல் அடிகியார் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26). லாரி கிளீனராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு செங்குன்றத்தை அடுத்த அம்பேத்கர் நகர் பழைய விமான தளம் அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அ

Update: 2016-12-26 23:15 GMT

செங்குன்றம்,

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி வட்டம் மேல் அடிகியார் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26). லாரி கிளீனராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு செங்குன்றத்தை அடுத்த அம்பேத்கர் நகர் பழைய விமான தளம் அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மணிகண்டனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசாரை பார்த்து அவர்கள் தப்பி ஓட முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் விரட்டி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் செங்குன்றத்தை அடுத்த காந்திநகர் சமத்துவபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (25) செங்குன்றத்தை அடுத்த காந்திநகர் பெருமாள் அடிப்பாதத்தை சேர்ந்த வெங்கடேஷ் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்த போலீசார் பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்