தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 80 பேர் கைது

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 80 பேரை போலீசார் கைது செய்தனர். 80 பேர் கைது தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும், பயிர

Update: 2016-12-26 22:30 GMT

கோவை

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

80 பேர் கைது

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும், பயிர் பாதித்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அந்த சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் நேற்று காலையில் கலெக்டர் அலுவலகம் அருகே திரண்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் 20 பெண்கள் உள்பட 80 பேரை கைது செய்தனர்.

இந்த போராட்டம் குறித்து முன்னாள் எம்.எல்.ஏ.வும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில பொருளாளருமான எம்.ஆறுமுகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி ஆகியோர் கூறியதாவது:–

வறட்சி மாநிலம்

இந்த ஆண்டு தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. கோவையில் எப்போதும் இல்லாத அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. இதனால் கால்நடைகளுக்கு கூட தண்ணீர் வழங்க முடியாமல் விவசாயிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரமும், விவசாய தொழிலாளர் குடும்பத்துக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்டும் இதுவரை அமைக்கப்பட வில்லை. தமி ழகத்துக்கு கொடுக்கப்பட வேண்டிய தண்ணீரை வழங்காததால் விவசாயிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். பலர் தற்கொலையும் செய்து உள்ளனர். எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். விவசாய கடன்களை ரத்து செய்வதுடன், புதிய பயிர்க்கடனையும் உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் திருஞானசம்பந்தம், மாவட்ட அமைப்பாளர் சுப்பையன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்