தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தேனி மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங

Update: 2016-12-26 22:00 GMT

தேனி

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தேனி மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

 சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், பருவமழை பொய்த்துப் போனதால் தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், தேனி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளான கண்மாய், குளங்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் இளையராஜா ஆகியோர் தலைமை தாங்கினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தங்கம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்