ஆட்டோ டிரைவர் கொலையில் தொடர்புடையவர்கள் உள்பட 3 வாலிபர்கள், குண்டர்சட்டத்தில் கைது

தஞ்சையில் ஆட்டோ டிரைவர் கொலையில் தொடர்புடையவர்கள் உள்பட 3 வாலிபர்கள் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 3 வாலிபர்கள் தஞ்சை விளார் சாலையில் உள்ள சண்முகநாதன்நகர் 1–வது தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். இவருடைய மகன் லம்பா கவுதமன் என்

Update: 2016-12-26 18:25 GMT

தஞ்சாவூர்,

தஞ்சையில் ஆட்டோ டிரைவர் கொலையில் தொடர்புடையவர்கள் உள்பட 3 வாலிபர்கள் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

3 வாலிபர்கள்

தஞ்சை விளார் சாலையில் உள்ள சண்முகநாதன்நகர் 1–வது தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். இவருடைய மகன் லம்பா கவுதமன் என்ற கவுதமன் (வயது26). விளார்சாலை நாவலர் நகரை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் புட்டு அறிவு என்ற அறிவழகன் (26). நாவலர்நகர் 2–வது தெருவை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவருடைய மகன் மண்டைகோபி என்ற கோபிசுந்தர் (27).

இவர்கள் 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து கவுதமன், அறிவழகன், கோபிசுந்தர் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், கலெக்டர் அண்ணாதுரைக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் அண்ணாதுரை 3 பேரையும் குண்டர்சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

குண்டர்சட்டத்தில் கைது

அதன்பேரில் தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, குண்டர் சட்டத்தில் கவுதமன், அறிவழகன், கோபிசுந்தர் ஆகிய 3 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.

கடந்த அக்டோபர் மாதம் 20–ந்தேதி விளார்சாலை காயிதேமில்லத்நகரை சேர்ந்த ஆட்டோடிரைவர் சார்லஸ் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அறிவழகன், கோபிசுந்தர் ஆகியோர் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்