கடற்கரையில் சாக்கு மூடையில் 10 கிலோ கஞ்சா கடலோர போலீசார் கைப்பற்றினர்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள வலங்காபுரி தெற்கு கடற்ரை பகுதியில் இருந்து கடத்தல் காரர்கள் இலங்கைக்கு கஞ்சாவை கடத்தி செல்ல உள்ளதாக கடலோர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வ

Update: 2016-12-26 22:00 GMT

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள வலங்காபுரி தெற்கு கடற்ரை பகுதியில் இருந்து கடத்தல் காரர்கள் இலங்கைக்கு கஞ்சாவை கடத்தி செல்ல உள்ளதாக கடலோர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயபாஸ்கரன் உத்தரவின் பேரில் மண்டபம் கடலோர போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் ஜோதிபாசு, போஸ் ஆகியோர் தலைமையில் போலீசார் புதுமடம் அருகே உள்ள வலங்காபுரி கடற்கரைக்கு விரைந்து சென்றனர். அப்போது கடற் கரையில் மர்மமான முறையில் கிடந்த ஒரு சாக்கு மூடையை அவிழ்த்து சோதனை செய்தனர். அதில் 5 பார்சல்களில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து கடற்கரை பகுதியில் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரும் சுற்றித் திரிகின்றனரா என்று கடலோர போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் 10 கிலோ கஞ்சாவை கைப்பற்றி மண்டபத்தில் உள்ள கடலோர காவல் நிலையத்திற்குகொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்