கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ரேஷன்கார்டுகளை ஒப்படைத்து 5 கிராம மக்கள் போராட்டம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட பெரியகோடகுடி, வக்கனக்கோட்டை, சிறுவனூர், சித்தானூர், சின்னகோடகுடி ஆகிய 5 கிராமங்களில் உள்ள கண்மாய்களின் நீர்ப்பிடிப்பு பகுதிகளை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளார்களாம். இதனால் கண்மாய்க்கு நீர் வரத்து தடைபட

Update: 2016-12-26 22:45 GMT

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட பெரியகோடகுடி, வக்கனக்கோட்டை, சிறுவனூர், சித்தானூர், சின்னகோடகுடி ஆகிய 5 கிராமங்களில் உள்ள கண்மாய்களின் நீர்ப்பிடிப்பு பகுதிகளை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளார்களாம். இதனால் கண்மாய்க்கு நீர் வரத்து தடைபட்டு விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி தேவகோட்டை சப்–கலெக்டரிடம் அந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் மனு கொடுத்துள்ளனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 5 கிராமங்களை சேர்ந்த 100–க்கும் மேற்பட்டோர் தங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோவிடம் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற 10 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அதிகாரி உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் தங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை திரும்ப பெற்று சென்றனர்.

மேலும் செய்திகள்