மோட்டார் சைக்கிள்–வேன் மோதல்: விபத்தில் என்ஜினீயர் பலி

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர். என்ஜினீயர் பலி சென்னை ஆர்.கே.நகர் நேதாஜி நகர், 1–வது தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 26). இவர், தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை ப

Update: 2016-12-25 22:00 GMT

ராயபுரம்

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

என்ஜினீயர் பலி

சென்னை ஆர்.கே.நகர் நேதாஜி நகர், 1–வது தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 26). இவர், தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

ஆர்.கே.நகர் வைத்தியநாதன் மேம்பால இறக்கத்தில் அவர் சென்றபோது அவருக்கு பின்னால் வந்த வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டன், தலையில் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

டிரைவர் கைது

இதுபற்றி தகவல் அறிந்து வந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், வேன் டிரைவரான தண்டையார்பேட்டையை சேர்ந்த டில்லிபாபு(31) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்