இரும்பு வியாபாரி கடத்தப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது
கிண்டி மடுவங்கரை காந்தி மார்க்கெட்டில் இரும்பு கடை நடத்தி வருபவர் முகமதுஅலி (வயது 40). கடந்த 18–ந்தேதி பல்லாவரத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் காரில் சாப்பிட வந்த இவரை மர்மகும்பல் கடத்திச் சென்றது. அந்த கும்பல் முகமது அலியிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டியது. பின்ன;
தாம்பரம்
கிண்டி மடுவங்கரை காந்தி மார்க்கெட்டில் இரும்பு கடை நடத்தி வருபவர் முகமதுஅலி (வயது 40). கடந்த 18–ந்தேதி பல்லாவரத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் காரில் சாப்பிட வந்த இவரை மர்மகும்பல் கடத்திச் சென்றது. அந்த கும்பல் முகமது அலியிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டியது. பின்னர் அவர் போலீசுக்கு தெரியாமல் ரூ.10 லட்சத்தை கடத்தல் கும்பலிடம் கொடுத்ததால் விடுவிக்கப்பட்டார்.
இதுகுறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடத்தலில் ஈடுபட்ட நெல்லையை சேர்ந்த பிரபல தாதா பாளையங்கோட்டை ரபீக் (51) என்பவரை ஏற்கனவே கைது செய்து இருந்தனர்.
இந்த நிலையில் தாதா ரபீக்கிற்கு உதவியதாக சென்னை மவுலிவாக்கத்தைச் சேர்ந்த மொய்தீன்பிச்சை (51) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இவர் ஈக்காட்டுதாங்கலில் இரும்புகடை நடத்தி வந்தார்.