புழல் சிறையில் கைதிகள் 3–வது நாளாக உண்ணாவிரதம்

சென்னையை அடுத்த அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 54). திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவராக இருந்து வந்த இவர், கடந்த 2014–ம் ஆண்டு அம்பத்தூரில் உள்ள அவரது அலுவலகம் அருகே மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்க

Update: 2016-12-25 21:43 GMT

செங்குன்றம்,

சென்னையை அடுத்த அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 54). திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவராக இருந்து வந்த இவர், கடந்த 2014–ம் ஆண்டு அம்பத்தூரில் உள்ள அவரது அலுவலகம் அருகே மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அபுதாகீர் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

அபுதாகீர் உள்ளிட்ட 10 கைதிகளும், சிறையில் உயர்மட்ட பாதுகாப்பு அறையில் இருந்து தங்களை சாதாரண சிறைக்கு மாற்ற வேண்டும். தங்களை உறவினர்கள் பார்க்க விதிக்கப்பட்டு உள்ள தடையை தளர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23–ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று 3–வது நாளாக கைதிகள் 10 பேரும் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களிடம் சிறை சூப்பிரண்டு குமரேசன்(பொறுப்பு) தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்