புதுச்சேரி அரசின் டைரி–காலண்டர் நாராயணசாமி வெளியிட்டார்

புதுவை அரசின் டைரி மற்றும் காலாண்டரை முதல்–அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார். டைரி–காலாண்டர் புதுவை அரசின் சார்பில் ஆண்டுதோறும் டைரி (நாட்குறிப்பு), காலண்டர் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டிற்கான டைரி மற்றும் காலண்டர் போன்றவ

Update: 2016-12-25 22:00 GMT

புதுச்சேரி

புதுவை அரசின் டைரி மற்றும் காலாண்டரை முதல்–அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார்.

டைரி–காலாண்டர்

புதுவை அரசின் சார்பில் ஆண்டுதோறும் டைரி (நாட்குறிப்பு), காலண்டர் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டிற்கான டைரி மற்றும் காலண்டர் போன்றவை புதுவை அரசின் அச்சகத்தில் அச்சிடப்பட்டு தயாராகி உள்ளது.

இந்த புதிய டைரி, காலண்டரின் வெளியீட்டு நிகழ்ச்சி சட்டமன்ற வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு டைரி, காலாண்டரை வெளியிட்டார்.

அதை அமைச்சர் நமச்சிவாயம் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் அரசு அச்சகத்துறை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி உள்பட அதிகாரிகள், சட்டமன்ற ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

சுற்றுலா தலங்கள்

அரசு காலாண்டரில் புதுவை மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், நுழைவு வாயில்கள், பழம்பெருமை வாய்ந்த கோவில்கள், கட்டிடங்கள், இயற்கை காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் டைரியில் கவர்னர், முதல்–அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் படங்கள், தொடர்பு எண்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்