புதுக்கோட்டை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. தேவாலயங்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கூட்டு பிராத்தனை செய்தனர். கிறிஸ்துமஸ் தின விழா இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை கிறிஸ்துவ மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக உ

Update: 2016-12-25 22:00 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. தேவாலயங்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கூட்டு பிராத்தனை செய்தனர்.

கிறிஸ்துமஸ் தின விழா

இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை கிறிஸ்துவ மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலக முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தியும், வீடுகளில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இனிப்பு வழங்கியும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் உள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் புதுக்கோட்டை மறைவட்ட அதிபர் சவரிமுத்து தலைமையில் கூட்டுப்பாடல் மற்றும் திருப்பலி நடைபெற்றது.

தொடர்ந்து இரவு 11.59 மணியளவில் இயேசு கிறிஸ்து பிறந்த நேரத்தில் சிறுவர், சிறுமியர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த இடமான மாட்டு தொழுவம்போல் குடில் அமைத்து அதை சுற்றிலும் தேவதைகள் போல் உடை அணிந்து நின்று நடனம் ஆடி இயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடினர். தொடர்ந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனை செய்து வழிப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் வழங்கியும், கை கொடுத்தும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். இதைப்போல புதுக்கோட்டை நகரில் உள்ள அனைத்து கிறிஸ்துவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

அறந்தாங்கி

இதைப்போல அறந்தாங்கியில் உள்ள கிறிஸ்துராஜா தேவாலயம், டி.இ.எல்.சி தேவாலயம் உள்பட பல தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை 1 மணி வரை கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கூட்டு பிராத்தனை செய்து வழிபாடு நடத்தினர். வழிபாடு முடிந்ததுடன் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்தும், இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். இதைப்போல ஏகனிவயல், விச்சூர், பாதரக்குடி பகுதியில் உள்ள தேவாலயங்கள் உள்பட அறந்தாங்கி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இலுப்பூர்

இலுப்பூர் புனத அந்தோணியார் கோவில். இலுப்பூர் அருகே உள்ள சாத்தம்பட்டி தூய இன்னாசியார் ஆலயம் உள்ளிட்ட இலுப்பூர், அன்னவாசல் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவலாலயங்களில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துஸ் விழாவினை சிறப்பாக கொணடாடினார்கள். இதனையொட்டி திரளான கிறிஸ்தவர்கள் கூடி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்