குளித்தலை– முசிறி காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார் பாலத்தில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

குளித்தலை– முசிறி காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார் பாலத்தில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்;

Update: 2016-12-25 22:15 GMT

குளித்தலை,

குளித்தலை– முசிறி காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார் பாலத்தில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்கூட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் குளித்தலையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். தொகுதி துணை செயலாளர் லெட்சுமணன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் அவினாசி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநில துணை பொதுச்செயலாளர் ஆற்றலரசு கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகபடுத்தி பேசினார். கூட்டத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) புதுச்சேரியில் நடைபெறும் மாநாட்டிற்கு கிழக்கு மாவட்டத்தில் இருந்து திரளான தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

திருச்சியில் உள்ள காவிரி பாலத்திலும், கரூர் அமராவதி பாலத்திலும் மின் விளக்கு வசதி இருப்பது போல குளித்தலை– முசிறி இடையே காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார் பாலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி மூலம் மின் விளக்கு வசதி செய்யப்பட்டு இருந்தது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி தற்போது இப்பாலம் இருளில் மூழ்கி உள்ளது. இது குறித்து நகராட்சிக்கு பலமுறை கோரிக்கைகள் வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையைபோக்க மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் விளக்கு வசதியோ? அல்லது சூரிய ஒளி மின் விளக்கு வசதியோ? விரைவில் ஏற்படுத்தி தர வேண்டும். இல்லையெனில் 6–1–2017 அன்று அரிக்கேன் விளக்கு ஏந்தி முசிறி பெரியார் பாலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாலை அணிவித்து மரியாதை

முன்னதாக குளித்தலை காந்திசிலை அருகில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது கோஷங்கள் எழுப்பினர் மேலும் கட்சி கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் குளித்தலை சட்டமன்ற தொகுதி செயலாளர் சுதாகர், ஒன்றிய செயலாளர்கள் மாயவன், ராஜ்குமார், தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொருளாளர் ராசா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்