பணத்தட்டுப்பாடு நீங்கும் வரை அரசு ஊழியர்களுக்கு மாதாந்திர சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் சங்க மாநாட்டில் தீர்மானம்
பணத்தட்டுப்பாடு நீங்கும் வரை அரசு ஊழியர்களுக்கு மாதாந்திர சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசு ஊழியர் சங்க மாநாடு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மா;
ஜெயங்கொண்டம்
பணத்தட்டுப்பாடு நீங்கும் வரை அரசு ஊழியர்களுக்கு மாதாந்திர சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசு ஊழியர் சங்க மாநாடு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் பஞ்சாபிகேசன் தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் வட்ட செயலாளர் முத்து, செந்துறை வட்ட தலைவர் காமராஜ், சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயங்கொண்டம் வட்டத் தலைவார் சிபி ராஜா வரவேற்றார். மாவட்ட செயலாளர் மகாலிங்கம், மாவட்ட துணைத்தலைவர் துரைவேந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதியக்குழுவினை உடனடியாக அமைத்து ஊதிய உயர்வை அறிவிக்கவேண்டும். ஊதியக்குழுவினை அமைக்கும்வரை 20 சதவீதம் ஊதியத்தினை முன்பணமாக வழங்கவேண்டும்.
வங்கியில் நிலவும் பணத்தட்டுபாடு நீங்கும் வரை அரசு ஊழியர்களுக்கு மாதாந்திர சம்பளத்தை வங்கியில் செலுத்தாமல் அலுவலகம் மூலம் ரொக்கமாக வழங்கவேண்டும். சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி செயலர்கள், கிராம உதவியாளர்கள் அனைவருக்கும் நிரந்தர காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் தேர்வு
பின்னர் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக பஞ்சாபிகேசன், மாவட்ட செயலாளராக வேல்முருகன், மாவட்ட பொருளாளராக துரைவேந்தன், மாவட்ட துணைத்தலைவர்களாக மோகன், விஜயகுமார், பைரவன், ராமலிங்கம், மாவட்ட இணைசெயலாளர்களாக ராமஷ், துரை, மணிமாறன், ஆசைதம்பி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் முத்து நன்றி கூறினார்.