குமரி மாவட்டத்தில் செயல்பட்ட ஏ.டி.எம்.களும் மூடல்: பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதி
குமரி மாவட்டத்தில் செயல்பட்ட ஏ.டி.எம்.களும் மூடப்பட்டதால் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர். சில்லரை தட்டுப்பாடு நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8–ந் தேதி இரவு பிரதமர் நரேந்திரமோடி அறிவித்;
நாகர்கோவில்
குமரி மாவட்டத்தில் செயல்பட்ட ஏ.டி.எம்.களும் மூடப்பட்டதால் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
சில்லரை தட்டுப்பாடுநாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8–ந் தேதி இரவு பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். மேலும் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளவும், வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கும் சில கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விதித்தது. மேலும் ஏ.டி.எம்.கள் மற்றும் வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளே பெரும்பாலும் வழங்கப்படுவதால் சில்லரை தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் சில்லரை தட்டுப்பாடு நிலவுவதால் மார்க்கெட் மற்றும் சந்தைகளில் வியாபாரம் வழக்கத்தை விட சற்று குறைந்து காணப்படுகிறது. கோட்டார் மார்க்கெட்டில் இருப்பு உள்ள பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், பெரிய அளவிலான இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர். சில்லரை தட்டுப்பாட்டை போக்க குமரி மாவட்டத்தில் சில வங்கிகளுக்கு ரூ.500 நோட்டுகளை அதிகளவில் ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ளது. மேலும் ஒரு ரூபாய் நோட்டுகளும் வழங்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிறு வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் மக்கள் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம்.களை நாடியுள்ளனர்.
ஏ.டி.எம்.கள் மூடல்குமரி மாவட்டத்தில் ஏராளமான ஏ.டி.எம்.கள் இன்னமும் திறக்கப்படவில்லை. சில ஏ.டி.எம்.கள் மட்டுமே செயல்படுகிறது. நாகர்கோவிலில் வடசேரி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.கள், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் உள்ள சில ஏ.டி.எம்.கள் மற்றும் கலெக்டர் அலுவலகம் பகுதியில் உள்ள ஏ.டி.எம்.கள் செயல்படுகின்றன. இந்த ஏ.டி.எம்.களில் நேற்று முன்தினம் பணம் வந்தது. இதனால் அந்த ஏ.டி.எம்.கள் முன் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இந்த நிலையில் செயல்பட்ட ஏ.டி.எம்.களிலும் சில ஏ.டி.எம்.கள் நேற்று மூடப்பட்டிருந்தது. அந்த வகையில் நாகர்கோவிலில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.கள், கலெக்டர் அலுவலகம் பகுதியில் உள்ள ஏ.டி.எம்.கள் மூடப்பட்டிருந்தன. இதனால் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர். 2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) வங்கிகள் திறக்கப்படும் என்பதால் வங்கிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.