காங்கேயம் அருகே பெண் கொலை: “கள்ளத்தொடர்பை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன்” கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்
காங்கேயம் அருகே பெண்ணை அரிவாளால் வெட்டிக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். கள்ளத்தொடர்பை கைவிடாததால் வெட்டிக்கொலை செய்ததாக கைதான கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– கணவன்–மனைவி
காங்கேயம்,
காங்கேயம் அருகே பெண்ணை அரிவாளால் வெட்டிக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். கள்ளத்தொடர்பை கைவிடாததால் வெட்டிக்கொலை செய்ததாக கைதான கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
கணவன்–மனைவிதேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கீரப்பாறை தெற்கு தெருவை சேர்ந்தவர் கலையரசன் (வயது 43). இவரது மனைவி மணிமேகலை (38). இவர்களுக்கு சந்துரு (15), சச்சின் (10) என்ற 2 மகன்களும், சந்தியா (13) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன்–மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர்.
இதையடுத்து மணிமேகலை தனது மகள் சந்தியா, மகன் சச்சின் ஆகியோரை அழைத்துக்கொண்டு திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே முத்துக்காளிவலசில் உள்ள ஒரு தேங்காய் களத்திற்கு வந்து அங்குள்ள வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். கலையரசன் ஆண்டிபட்டியில் தனது மூத்த மகன் சந்துருவுடன் கீரப்பாறையில் தங்கி வேலை செய்து வந்தார்.
கொலைஇந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்துக்காளிவலசு தேங்காய் களத்தில் உள்ள வீட்டில் இருந்த மணிமேகலையை அவரது கணவன் கலையரசன் அரிவாளால் சரமாரியாக வெட்டி வீட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் படுகாயமடைந்த மணிமேகலையை மீட்டு உடனடியாக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே மணிமேகலை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
கணவர் கைதுஇந்த கொலை தொடர்பாக காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து கலையரசனை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை காங்கேயம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கலையரசன் போலீசில் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:–
கள்ளத்தொடர்புதேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கீரப்பாறைதான் எனது சொந்த ஊராகும். நான் எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாக வசித்து வந்தேன். அப்போதே என் மனைவி மீது எனக்கு சந்தேகம் இருந்தது. இது குறித்து பலமுறை மணிமேகலையிடம் கேட்டேன். அவள் பதில் சொல்லாமல் சாமர்த்தியமாக மறுத்து விடுவாள். எனது சந்தேகத்தை உறுதி செய்யும் விதமாக மணிமேகலை என்னை விட்டு பிரிந்து சென்று எங்கள் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை 2–வதாக திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் அவர்கள் தேனியில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தனர். அப்போது எனது மகன் சச்சின் மற்றும் மகள் சந்தியாவை உடன் அழைத்து சென்று விட்டார். இதுபற்றி கேள்விப்பட்ட எங்கள் ஊரை சேர்ந்தவர்கள் என்னை கேவலமாக பேசினார்கள். இதுபற்றி நான் ஆண்டிபட்டியில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தேன். போலீசார் என்னை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். நான் எனது மூத்த மகன் சந்துருவுடன் கீரப்பாறையில் தனியாக வசித்து வந்தேன்.
இந்த நிலையில் முருகனின் மனைவி இந்த விவகாரத்தில் தலையிட்டதால் முருகன் என்மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னரும் என்மனைவி மணிமேகலை, 3–வதாக கேப்டன் என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. அவரும் ஏற்கனவே திருமணமானவர். இதனால் நான் ஊரில் தலைகாட்ட முடியவில்லை. இது எனக்கு அவமானமாக இருந்தது. எனவே கள்ளத்தொடர்பை கைவிடும்படியும், மீண்டும் நாம் சேர்ந்து வாழலாம் என்றும் மணிமேகலையை சந்தித்து கூறினேன். ஆனால் மணிமேகலை, நான் கூறியதை கேட்கவில்லை. அதன்பின்னரும் கேப்டன் என்ற வாலிபருடனான கள்ளத்தொடர்பு தொடர்ந்தது.
இந்தநிலையில் மணிமேகலை தனது மகள் மற்றும் மகனுடன் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள தேங்காய் களத்திற்கு வேலைக்கு சென்று விட்டார் என தெரியவந்தது. இதற்கிடையில் எனது மகள் சந்தியா, மணிமேகலையிடம் வளர்ந்து வருவது எனக்கு சரியாக தெரியவில்லை. எனவே மணிமேகலையை கொலை செய்ய முடிவு செய்தேன்.
அரிவாளால் வெட்டினேன்எனவே நேற்று முன்தினம் நான் காங்கேயம் வந்தேன். பின்னர் யாருக்கும் தெரியாமல் இரவு மணிமேகலை வேலை செய்யும் தேங்காய் களம் பகுதியில் நுழைந்தேன். அங்கு வீட்டின் வாசற்படிக்கட்டில் மணிமேகலை அமர்ந்து இருந்தார். மணிமேகலையை பார்த்ததும் எனக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை.
இதுதான் தக்க சமயம் என்று நான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் மணிமேகலையை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடி விட்டேன். அதன்பின்னர் நடந்து சென்று காங்கேயம் அருகே காடையூரில் உள்ள ஒரு கிணற்றில் கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை வீசினேன். அங்கிருந்து கொடுவாய் சென்று பஸ் ஏறி ஊருக்கு சென்று விடலாம் என்று நினைத்து கொடுவாய் கடைவீதியில் நடந்து சென்ற போது போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு கலையரசன் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை அந்த கிணற்றில் இருந்து போலீசார் நேற்று மீட்டனர். பெண்ணை கொலை செய்து விட்டு தப்பிய கணவரை சில மணி நேரத்தில் கைது செய்த போலீசாரை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்தானபாண்டியன் பாராட்டினார்.