கும்பாஉருட்டி அருவியில் குளித்துவிட்டு திரும்பிய போது பாறையில் வழுக்கி விழுந்து 2 வாலிபர்கள் பலி நண்பர்களிடம் போலீசார் விசாரணை
கும்பாஉருட்டி அருவியில் குளித்துவிட்டு திரும்பிய போது பாறையில் வழுக்கி விழுந்து 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இதுதொடர்பாக அவர்களுடைய நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கும்பாஉருட்டி அருவி தமிழக–கேரள எல்லையான நெல்லை மாவட்டம் செங
செங்கோட்டை,
கும்பாஉருட்டி அருவியில் குளித்துவிட்டு திரும்பிய போது பாறையில் வழுக்கி விழுந்து 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இதுதொடர்பாக அவர்களுடைய நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்பாஉருட்டி அருவிதமிழக–கேரள எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்து கும்பாஉருட்டி சுற்றுலா தளம் உள்ளது. இந்த வனப்பகுதியில் உள்ள அருவியில் குளிர்ப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாஉருட்டி அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தடையையும் மீறி சில சுற்றுலா பயணிகள் குளித்து வருகிறார்கள். அவ்வாறு செல்லும் போது, சில சமயங்களில் விபத்துகள் நேரிடுகிறது.
இந்த நிலையில் கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்தவர் மணிக்குட்டன் (வயது 30). இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த அணில் (30), மனோஜ் (35), அஜீ(28), அனி (30) ஆகியோருடன் ஒரு காரில் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர்.
2 பேர் சாவுஅதன்படி நேற்று அவர்கள் 5 பேரும் ஒரு காரில் பண்பொழி கோவிலுக்கு வந்தனர். பின்னர் சாமி கும்பிட்டுவிட்டு கும்பாஉருட்டி அருவிக்கு குளிக்க சென்றனர். அங்கு சுற்றுலா பயணிகள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், வனத்துறை ஊழியர் ஒருவரின் உதவியோடு அவர்கள் அருவியில் குளிக்க சென்றனர். அங்கு ஆனந்தமாக குளித்து விட்டு பாறை வழியாக நடந்து வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது, மணிக்குட்டன், அனி ஆகியோர் கால் தவறி அருகில் உள்ள பாறையில் வழுக்கி விழுந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதனால் மற்ற 3 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே மணிக்குட்டனை மட்டும் மனோஜ் தூக்கிக் கொண்டு காரில் செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை தெரிவித்தனர்.
நண்பர்களிடம் விசாரணைஇதுகுறித்து தகவல் அறிந்த கேரள மாநிலம் கோணி போலீசார் கும்பாஉருட்டி பகுதிக்கு விரைந்து வந்தனர். அங்கு கிடந்த அனி உடலை மீட்டு பரிசோதனைக்காக புனலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜூ, அணில் ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.