கள்ளக்குறிச்சி அருகே மினி லாரி மீது லாரி மோதல்; 15 பேர் காயம்

கள்ளக்குறிச்சி அருகே மினி லாரி மீது லாரி மோதிய விபத்தில் 15 பேர் காயமடைந்தனர். கரும்பு வெட்ட... கள்ளக்குறிச்சி அருகே உள்ள உடையநாச்சி கிராமத்தை சேர்ந்த 20–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலையில் எறஞ்சி கிராமத்திற்கு கரும்பு வெட்டுவதற்காக ஒரு மினி லாரியில

Update: 2016-12-25 17:37 GMT

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே மினி லாரி மீது லாரி மோதிய விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்.

கரும்பு வெட்ட...

கள்ளக்குறிச்சி அருகே உள்ள உடையநாச்சி கிராமத்தை சேர்ந்த 20–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலையில் எறஞ்சி கிராமத்திற்கு கரும்பு வெட்டுவதற்காக ஒரு மினி லாரியில் புறப்பட்டனர். இந்த மினிலாரி கள்ளக்குறிச்சி–கூத்தக்குடி சாலையில் புதுஉச்சிமேடு அருகே சென்ற போது, எதிரே வந்த லாரி மினி லாரி மீது மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி சாலையோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

15 பேர் காயம்

இந்த விபத்தில் மினி லாரியில் இருந்த கொளஞ்சி(47), அமுதா(35), பிரேமா(28), வேல்முருகன்(36), வளர்மதி(32), அண்ணாதுரை, லதா, லலிதா, ராஜேந்திரன் உள்பட 15 பேர் காயம் அடைந்தனர். இவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் கொளஞ்சி, அமுதா, பிரேமா, வேல்முருகன் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்