அலங்காநல்லூரில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்: கிராமம், கிராமமாக சென்று துண்டு பிரசுரம் வினியோகம் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உண்ணாவிரதம்
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி தி.மு.க. சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்து, தி.மு.க.வினர் கிராமம், கிராமமாக சென்று துண்டு பிரசுரம் வழங்கினர். மேலும் குலமங்கலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டை நடத்
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி தி.மு.க. சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்து, தி.மு.க.வினர் கிராமம், கிராமமாக சென்று துண்டு பிரசுரம் வழங்கினர். மேலும் குலமங்கலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டை நடத்த கோரி உண்ணாவிரதம் நடைபெற்றது.
துண்டு பிரசுரம்அலங்காநல்லூரில் வருகிற 3–ந்தேதி தி.மு.க. சார்பில் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதற்காக அலங்காநல்லூர் ஒன்றியம் பண்ணைகுடி, அச்சம்பட்டி, சர்க்கரை ஆலை மேட்டுபட்டி, வாவிடமருதூர், சால்வார்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் துண்டு பிரசுரங்களை வழங்கி மாடுபிடி வீரர்கள், காளை வளர்ப்போர், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், கிராமமக்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டி அழைப்பு விடுத்தனர்.
துண்டு பிரசுரத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி வருகிற 3–ந்தேதி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதில் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியின் போது ஒன்றிய செயலாளர் கென்னடி கண்ணன், மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
உண்ணாவிரதம்இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற வலியுறுத்தி குலமங்கலத்தில் உண்ணாவிரதம் நடந்தது. மேற்கு ஒன்றிய குழு உறுப்பினர் வீரியபெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலா, முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன், கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம், எழுத்தாளர் சங்க மாவட்ட தலைவர் மருது பாரதி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் மத்திய, மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு நடைபெற தேவையான சிறப்பு சட்டம் இயற்றி நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற்று தரவேண்டும் என்று பேசப்பட்டது. உண்ணாவிரத நிகழ்ச்சியில் 200–க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அலங்காநல்லூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.