கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்

கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என நெல்லையில் நேற்று நடந்த மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட மாநாடு மாற்றுத்திறனாளிகள் நல விரும்பும் தேசிய அமைப்பின் சார்பில் நெல்லை மாவட்ட மாநாடு பாளையங்கோட்டை

Update: 2016-12-25 23:00 GMT

நெல்லை,

கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என நெல்லையில் நேற்று நடந்த மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட மாநாடு

மாற்றுத்திறனாளிகள் நல விரும்பும் தேசிய அமைப்பின் சார்பில் நெல்லை மாவட்ட மாநாடு பாளையங்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் நல்லகண்ணு தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். துர்காதேவி மாநாட்டை தொடங்கி வைத்தார்.

நெல்லை மாவட்ட பாரதீய ஜனதா கட்சி அமைப்பு செயலாளர் சுரேஷ், பரமேஸ்வரன், ராஜகோபால் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மாநாட்டு தீர்மானங்களை பாலமுருகன் முன்மொழிந்தார். தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

பணி நிரந்தரம்

அரசு மற்றும் தனியார் துறைகளில் தற்காலிக அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக நெல்லை மாவட்டத்தில் தொழில் பூங்கா அமைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் பள்ளிகளை சீரமைக்க வேண்டும். பார்வையற்றோருக்கான சிறப்பு சலுகை பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும். மாதந்தோறும் குறை தீர்க்கும் முகாம் நடத்த வேண்டும்.

3 சக்கர மோட்டார் சைக்கிள்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இவ்வாறு மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் மாவட்ட செயலாளர் லட்சுமணன் நன்றி கூறினார். இதில் திரளான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்