திருவண்ணாமலையில் தந்தை–மகன் மீது தாக்குதல் 3 பேர் கைது
திருவண்ணாமலை பேகோபுரம் 8–வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 48). இவர் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (28), விமல் (31), கிருஷ்ணன் (20) ஆகியோர் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரை தரக்குறைவாக திட்டியுள;
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை பேகோபுரம் 8–வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 48). இவர் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (28), விமல் (31), கிருஷ்ணன் (20) ஆகியோர் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரை தரக்குறைவாக திட்டியுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட கண்ணனை இரும்பு ராடால் தாக்கினர். கண்ணனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது மகன் அருணாசலம், மகள் புவனேஸ்வரி ஆகியோர் தந்தை கண்ணனை காப்பாற்ற முயன்றனர். அப்போது அருணாசலத்தையும் அவர்கள் தாக்கினர்.
இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசில் கண்ணன் புகார் அளித்தார். அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்து, விமல், கிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.