திருவண்ணாமலை அருகே குடும்பத் தகராறில் பெண் அடித்து கொலை தப்பியோடிய கணவருக்கு வலைவீச்சு
திருவண்ணாமலை அருகே குடும்பத் தகராறில் பெண்ணை அடித்து கொலை செய்து விட்டு தப்பியோடிய கணவரை போலீசார் தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– குடும்பத் தகராறு திருவண்ணாமலை தேனிமலை பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 37), இவருடைய மனைவி கோவ
தண்டராம்பட்டு,
திருவண்ணாமலை அருகே குடும்பத் தகராறில் பெண்ணை அடித்து கொலை செய்து விட்டு தப்பியோடிய கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
குடும்பத் தகராறுதிருவண்ணாமலை தேனிமலை பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 37), இவருடைய மனைவி கோவிந்தம்மாள் (35). இவர்களுக்கு ரோகித்குமார் (3) என்ற மகனும், பவித்ரா (2) என்ற மகளும் உள்ளனர். கோபி சென்னையில் கூலி வேலை செய்து வந்தார். கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக கோபிக்கும், கோவிந்தம்மாளுக்கும் இடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கோபி தனது 2 குழந்தைகளையும் சென்னைக்கு அழைத்து சென்றார். சில நாட்கள் கழித்து கோவிந்தம்மாளை சென்னைக்கு வரும்படி கோபி அழைத்துள்ளார். ஆனால் கோவிந்தம்மாள் சென்னைக்கு செல்ல மறுத்து விட்டார்.
அடித்துக் கொலைஇந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு மகள் பவித்ராவுடன் கோபி வந்தார். பவித்ராவை தேனிமலையில் உள்ள அவரது வீட்டில் விட்டுவிட்டு மனைவி கோவிந்தம்மாளை தனியாக அழைத்து சென்று சமாதானம் செய்துள்ளார்.
அணைக்கரையை அடுத்த சாவல்பூண்டி கிராமத்திற்கு செல்லும் வழி அருகே இருவரும் செல்லும்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதில் ஆத்திரமடைந்த கோபி அருகே கிடந்த கட்டையால் கோவிந்தம்மாளை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கோவிந்தம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கோபி அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
கணவருக்கு வலைவீச்சுநேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோவிந்தம்மாள் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் திருவண்ணாமலை புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், வெறையூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் தண்டராம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்பநாய் ராம்போ கொண்டு வரப்பட்டது. ராம்போ யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.
கோவிந்தம்மாளின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கோபியை தேடி வருகிறார்கள்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.