குடியாத்தத்தில் 250 பெண்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம்

குடியாத்தம் படவேட்டு எல்லையம்மன் கோவிலில் மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க இளைஞர் மகளிர் வழிபாட்டு மன்றம் சார்பில் தீச்சட்டி ஏந்துதல், பால்குடம் ஊர்வலம் மற்றும் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்

Update: 2016-12-25 22:45 GMT

குடியாத்தம்,

குடியாத்தம் படவேட்டு எல்லையம்மன் கோவிலில் மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க இளைஞர் மகளிர் வழிபாட்டு மன்றம் சார்பில் தீச்சட்டி ஏந்துதல், பால்குடம் ஊர்வலம் மற்றும் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றது.

தீச்சட்டி ஊர்வலத்தை கம்பன் கழக தலைவர் ஜெ.கே.என்.பழனி, முன்னாள் நகரமன்ற தலைவர் எஸ்.அமுதா ஆகியோர் தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்தில் 250 பெண்கள் தீச்சட்டி ஏந்தியும், 1,001 பெண்கள் கஞ்சி களையங்கள் மற்றும் பால்குடங்களை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். ஊர்வலத்தில் பக்தர்கள் அம்மன் வேடமணிந்து தீச்சட்டியை ஏந்தி சென்றனர்.

ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தை சேர்ந்த ஜெயவேல், ஜீவா, பாபு, குமார், சரவணன், பாலாஜி உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்