குடியாத்தம் அருகே பெட்டிகள் தனியாக கழன்றதால் நிலக்கரி ஏற்றிய ரெயில் நடுவழியில் நிறுத்தம் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் தாமதம்

பெட்டிகள் தனியாக கழன்றதால் நிலக்கரி ஏற்றிய ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் தாமதமாக சென்றது. நிலக்கரி ஏற்றிய ரெயில் சென்னையில் இருந்து மேட்டூருக்கு நிலக்கரி ஏற்றிய ரெயில் வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக ஆம்பூ

Update: 2016-12-25 23:00 GMT

பேரணாம்பட்டு,

பெட்டிகள் தனியாக கழன்றதால் நிலக்கரி ஏற்றிய ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் தாமதமாக சென்றது.

நிலக்கரி ஏற்றிய ரெயில்

சென்னையில் இருந்து மேட்டூருக்கு நிலக்கரி ஏற்றிய ரெயில் வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக ஆம்பூரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் குடியாத்தத்தை கடந்து மேல்பட்டி அருகே குருநாதபுரம் பகுதியில் வந்தபோது ரெயில் பெட்டிகளை இணைக்கும் ‘கப்ளிங்’ கழன்றுள்ளது. அதனால் என்ஜின் மற்றும் சில பெட்டிகள் தனியாகவும், சரக்கு பெட்டிகள் மட்டும் தனியாகவும் கழன்றது. ஆனால் என்ஜினுடன் மற்ற பெட்டிகள் சென்று கொண்டிருந்தன. மேல்பட்டி ரெயில்நிலையம் அருகே சென்றபோதுதான் பாதி பெட்டிகள் கழன்றது தெரியவந்தது. இதனையடுத்து ரெயிலை அங்கேயே என்ஜின் டிரைவர் நிறுத்தினார்.

3 மணிநேரம் தாமதம்

அதைத்தொடர்ந்து ரெயில்வே பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் ரெயில் பெட்டிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காலை 10.30மணிக்கு துவங்கி மதியம் 12.45 மணிக்கு சரிசெய்தனர். அதன்பிறகு சரக்கு ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

சரக்கு ரெயில்பெட்டிகள் தனியாக கழன்றதால் அவ்வழியாக செல்ல இருந்த ரெயில்களுக்கு சிக்னல் கிடைக்கவில்லை. அதனால் அவ்வழியே வந்த சென்னை–பெங்களூரு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் மேல்பட்டி அருகே நிறுத்தப்பட்டது. சுமார் 3 மணி நேர தாமத்திற்கு பிறகு அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்