பெண்ணாடம் அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் ஊருக்கு வந்த இடத்தில் பரிதாபம்

பெண்ணாடம் அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் ஊருக்கு வந்த இடத்தில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. நண்பரை பார்ப்பதற்காக... வேப்பூர் தாலுகா நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாத;

Update: 2016-12-25 22:30 GMT

பெண்ணாடம்,

பெண்ணாடம் அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் ஊருக்கு வந்த இடத்தில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

நண்பரை பார்ப்பதற்காக...

வேப்பூர் தாலுகா நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் சக்திவேல்(வயது 33). இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு சித்தார்த்(7). சக்திவேல், குவைத்தில் வேலை செய்து வந்தார். 15 நாட்கள் விடுமுறையில் தற்போது சித்தார்த் ஊருக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் பெண்ணாடத்தில் உள்ள நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் சக்திவேல் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

விபத்து

மங்கலம்பேட்டை அருகே உள்ள சிறுவம்பார் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் செந்தில்குமார்(39). இவர் டிராக்டரில் பெண்ணாடம் நோக்கி சென்றார். 2 வாகனமும் பெ.பொன்னேரி ரெயில்வே மேம்பாலம் அருகே சென்றுகொண்டிருந்தன. செந்தில்குமார், டிராக்டரை சாலையில் தாறுமாறாக ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது. அந்த டிராக்டரை முந்திச்செல்ல முயன்றபோது சக்திவேலின் டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

பலி

இதில் படுகாயமடைந்த சக்திவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சக்திவேல் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சக்திவேலின் உறவினரான வதிஷ்டபுரத்தை சேர்ந்த வசந்தராகுல் பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் டிராக்டர் டிரைவரான செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்