ஆதார் எண்ணை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பதிய வேண்டும் தொழிலாளர்களுக்கு, கலெக்டர் அறிவுரை
ஆதார் எண்ணை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தொழிலாளர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கதிரவன் அறிவுரை வழங்கினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– ஆதார் எண் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ம
கிருஷ்ணகிரி
ஆதார் எண்ணை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தொழிலாளர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கதிரவன் அறிவுரை வழங்கினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
ஆதார் எண்கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பதிவு செய்து, வேலை அடையாள அட்டை பெற்று பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஊதியம் அவர்களின் வங்கி கணக்கிற்கு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் அறிவுரையின்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள பயனாளிக்கு மட்டும் வேலை வழங்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாத தொழிலாளர்களுக்கு ஆதார் எண் வழங்க 24.12.2016 முதல் 31.12.2016 வரை கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ஆலப்பட்டி, செம்படமுத்தூர், கட்டிகானப்பள்ளி, காட்டிநாயனப்பள்ளி கிராம ஊராட்சிகளிலும், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்தில் நெடுங்கல், மிட்டஹள்ளி,பாரூர், மல்லிநாயனப்பள்ளி கிராம ஊராட்சிகளிலும், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் வேப்பனப்பள்ளி, குருபரப்பள்ளி, நாச்சிக்குப்பம், தீர்த்தம் கிராம ஊராட்சிகளிலும், பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் கந்திகுப்பம், மாதேப்பள்ளி, ஜெகதேவி, போச்சம்பள்ளி கிராம ஊராட்சிகளிலும் முகாம் நடக்கிறது.
பதிவு செய்து கொள்ளுங்கள்அதே போல மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் குன்னத்தூர், மத்தூர், கொடமாண்டப்பட்டி, ஆனந்தூர் கிராம ஊராட்சிகளிலும், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் வெங்கடதாம்பட்டி, காரப்பட்டு, கல்லாவி, சிங்காரபேட்டை கிராம ஊராட்சிகளிலும், ஓசூர் ஊராட்சி ஒன்றியத்தில் எஸ்.முதுகானப்பள்ளி, தொரப்பள்ளி அக்ரஹாரம், பாகலூர், தும்மனப்பள்ளி கிராம ஊராட்சிகளிலும், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் சூளகிரி, உத்தனப்பள்ளி, காமன்தொட்டி, அத்திமுகம் கிராம ஊராட்சிகளிலும், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ராயக்கோட்டை, பிதிரெட்டி, போடிச்சிப்பள்ளி, இருதுகோட்டை கிராம ஊராட்சிகளிலும், தளி ஊராட்சி ஒன்றியத்தில் தளி, பேளகொண்டப்பள்ளி, கக்கதாசம், அஞ்செட்டி கிராம ஊராட்சிகளிலும் மற்றும் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் ஆதார் எண் பெற புகைப்படம் மற்றும் இதர விவரங்களை பதிவு செய்யும் முகாம் நடைபெற உள்ளது.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆதார் எண் இல்லாத தொழிலாளர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி ஆதார் எண் பெற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பதிவு செய்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.