பாண்டுகுடி லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

பாண்டுகுடி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆண்டாள் திருக்கல்யாணம் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பாண்டுகுடியில் ஆயிரவைசிய மஞ்சப்புத்தூர் மகாசபைக்க

Update: 2016-12-25 23:00 GMT

தொண்டி,

பாண்டுகுடி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆண்டாள் திருக்கல்யாணம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பாண்டுகுடியில் ஆயிரவைசிய மஞ்சப்புத்தூர் மகாசபைக்கு பாத்தியமான லட்சுமி நாராயணபெருமாள் கோவில் உள்ளது. இங்கு மார்கழி உற்சவத்தையொட்டி ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனையொட்டி நேற்று காலை கோவிலில் சாமி, அம்பாளுக்கு திருமஞ்சனம், திருப்பள்ளியெழுச்சி நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்னர் சாமி–அம்பாள் ஆண்டாள், ரெங்க மன்னார் திருக்கோலத்தில் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினர்.

அங்கு புண்ணியாக வாஜனம், ஊஞ்சல் உற்சவம், மாலை மாற்றுதல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் ஆண்டாள் பச்சைப்பட்டு உடுத்தியும், ரெங்கமன்னார் வெள்ளைப்பட்டு உடுத்தியும் மண மேடையில் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து சாமிக்கு பட்டு வஸ்திரங்கள் சாற்றுதல், பூணூல் அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதன்பின்பு யாகம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. இதைதொடர்ந்து, வேதமந்திரங்கள் முழங்க சாமியின் கையில் இருந்த தங்க தாலியை திண்டுக்கல் பெரியநம்பி பார்த்தசாரதி பட்டாச்சாரியார் ஆண்டாள் கழுத்தில் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

வீதி உலா

அதன்பின்பு நலுங்கு, வாரணம் ஆயிரம் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சாமி–அம்பாள் திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மாலையில் பாண்டுகுடி ராம பக்த பஜனை குழுவினரின் சிறப்பு பஜனையும், சாமி–அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் ரமேஷ் பார்த்தசாரதி பட்டாச்சாரியார், கோவிந்தராஜன், நரசிம்மன், ராமசேகர் பட்டாச்சாரியார் ஆகியோர் நடத்தினர்.

விழாவில் பாண்டுகுடி ஆயிர வைசிய மஞ்சப்புத்தூர் மகாசபை மற்றும் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் பரிபாலன சபை தலைவர் கோபால் செட்டியார், இணைத் தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர்கள் முத்துராமன், கண்ணன், கணேசன், செயலாளர்கள் நாராயணன், அரிவாசகம், பொருளாளர் கற்பூரம், இணைச் செயலாளர்கள் செல்வம், ஜானகிராமன், முருகேசன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்