விவசாயிகளுக்கு கடன் வழங்கியதாக கூட்டுறவு கடன் சங்கத்தில் கையாடல்; தலைவர், செயலாளர் கைது

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த வலசைபட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் கடந்த 2015–ம் ஆண்டு செயலாளராக மலைச்சாமி(வயது 48) என்பவரும், தலைவராக பாலகன்(47) என்பவரும் இருந்தனர். இவர்கள் 2 பேரும் கடந்த 2014–ம் ஆண்டு செ

Update: 2016-12-25 22:00 GMT

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த வலசைபட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் கடந்த 2015–ம் ஆண்டு செயலாளராக மலைச்சாமி(வயது 48) என்பவரும், தலைவராக பாலகன்(47) என்பவரும் இருந்தனர். இவர்கள் 2 பேரும் கடந்த 2014–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2015–ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலத்தில் விவசாயிகள் 11 பேருக்கு விவசாயக்கடன் கொடுத்ததாக கூறி ரூ.3 லட்சத்து 15 ஆயிரத்தை கையாடல் செய்தார்களாம். மேலும் செயலாளர் மலைச்சாமி அந்த சங்கத்தில் நகைக்கடன் திருப்ப கொடுத்த தொகை ரூ.1 லட்சத்தை கையாடல் செய்துள்ளார். இது குறித்து காரைக்குடி சரக கூட்டுறவு துறை துணை பதிவாளர் மாரீஸ்வரன், வணிகவியல் குற்ற புலனாய்வுத்துறை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் வணிகவியல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்–இன்ஸ்பெக்டர் ராணிமுத்து ஆகியோர் விசாரணை நடத்தி தொடக்க கூட்டுறவு சங்கத்தலைவர் பாலகன் மற்றும் செயலாளர் மலைச்சாமி ஆகிய 2 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்