48.வெளிநாட்டு வணிகர்களின் தொடர்பு என்ன?
வைகை நதி நாகரிக வரலாற்றுத்தேடலில் தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு இறுதியாகக் கிடைத்த கீழடி கிராமம், ‘பொன் முட்டையிடும் வாத்து’ என்றே கூறலாம்.

மற்ற இடங்கள் எல்லாம் நகர மயமாக்கல் காரணமாக ஆய்வுக் குரிய இடங்களாக இல்லாமல் மாறிவிட்ட நிலையில், கீழடி கிராமம் தென்னந்தோப்பாக இருந்ததால், அங்கே பூமிக்கு அடியில் புதைந்து கிடந்த பழங்கால தமிழர்களின் நாகரிக வரலாற்றைத் தோண்டி எடுக்க முடிந்தது.
ஆனாலும் இந்தத் தேடல் இன்னும் முற்றுப்பெறவில்லை.
மிகச்சரியாகச் சொல்வது என்றால், அங்கே ஒரு சதவீத அளவுக்கே தேடல் நடைபெற்று இருக்கிறது.
கீழடியில் ஆய்வு நடத்த தொல்பொருள் இலாகாவினர் 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சுமார் 100 ஏக்கர் நிலத்தைத் தேர்வு செய்து இருந்தார்கள். ஆனால், இதுவரை அங்கே ஒரு ஏக்கர் பரப்பளவில் மட்டுமே குழிகளைத் தோண்டி ஆய்வு செய்து இருக்கிறார்கள்.
அந்த ஒரு ஏக்கர் பரப்பே, பழங்கால தமிழர் நாகரிக வரலாற்றுக்கு ஏராளமான சான்றுகளை அள்ளிக்கொடுத்து இருக்கிறது.
அதிகாரிகளுக்கு வாய்ப்பும் வசதியும் கிடைத்து, மீதம் உள்ள மொத்த பகுதியையும் தோண்டிப்பார்த்தால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மிகப்பெரிய நகரை மீட்டுக்கொண்டு வர முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொல்பொருள் ஆய்வுகள் என்பது சில மாதங்களிலோ அல்லது ஓரிரு வருடங்களிலோ முடிந்து விடுவது இல்லை.
அது நீண்டகால பணியைக் கொண்டது ஆகும்.
சிந்து சமவெளியில் 20 ஆண்டுகளாக ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதால் தான், அங்கு இருந்த நாகரிகம் பற்றிய விவரங்கள் தெரிய வந்தன. ஆனாலும் அங்கு வாழ்ந்த மக்கள் பேசிய மொழி என்ன? அவர்கள் பயன்படுத்திய குறியீடுகளுக்கு அர்த்தம் என்ன? என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படாமலேயே உள்ளன.
குஜராத் மாநிலம் தொழவீரா என்ற இடத்தில் 10 ஆண்டுகளாக தொல்பொருள் ஆய்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
அது போல கீழடியில் முழு விவரங்களும் கிடைக்க வேண்டும் என்றால் அங்கே குறைந்தது 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
கீழடியில் இதுவரை நடைபெற்ற ஆய்வுகளின் மூலம், அந்தக்கால தமிழர்களின் வாழ்விடங்கள் குறித்த உறுதியான தகவல் கிடைத்து இருக்கிறது என்றாலும், இன்னும் பல தகவல்கள் கிடைக்க வேண்டி இருக்கிறது.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கே வாழ்ந்த தமிழர்கள் செய்த தொழில்கள் என்ன? அவர்கள் அன்றாட வாழ்க்கை முறை எப்படி இருந்தது? அவர்களுடன் வர்த்தகத்தில் ஈடுபட்ட வட மாநிலத்தினர் மற்றும் வெளிநாட்டினர் யார்? அவர்கள் எல்லாம் இங்கே எப்படி வந்தார்கள்? இங்கு இருந்தவர்கள் வெளிநாட்டினருடன் செய்த வாணிபம் என்ன? என்பது போன்ற எண்ணற்ற தகவல்கள் கிடைக்க வேண்டி இருக்கிறது.
இப்போது கீழடி என்று அழைக்கப்படும் பகுதி, அந்தக்காலத்தில் எந்த பெயருடன் பெருநகராக விளங்கியது என்பதே இன்னும் தெரியவில்லை.
அங்கு வாழ்ந்த மக்கள், அவர்களின் உணவு பழக்க வழக்கம், அவர்களின் உடல் அமைப்பு எப்படி இருந்தது என்பது போன்றவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால், அந்தக்கால மக்களின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட வேண்டும்.
ஆதிச்சநல்லூர் உள்பட தமிழகத்தின் மற்ற இடங்களில் நடைபெற்ற ஆய்வுகள் எல்லாம் அங்கு இருந்த மயான பூமியை மட்டுமே மையமாகக் கொண்டு இருந்ததால், அங்கு கிடைத்த முதுமக்கள்தாழிகள் மூலம் அங்கு வாழ்ந்த மக்கள் பற்றிய விவரங்களை அறிய முடிந்தது.
ஆனால், கீழடியில் நடைபெற்ற ஆய்வில், அங்கு வாழ்ந்த மக்களின் மயான பூமி கண்டுபிடிக்கப்படவில்லை. தோண்டப்பட்ட குழிகளிலும் மனித எலும்பு முழுவதுமாக எதுவும் கிடைக்கவில்லை.
கீழடி கிராமத்தின் அருகே கொந்தகை என்ற கிராமம் உள்ளது. கீழடியில் இருந்து கொந்தகை செல்லும் வழியில் ஈமக்காடு ஒன்று உள்ளது.
அங்கே சிதைந்த நிலையில் பல முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. இன்னும் அங்கே ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. ஒருவேளை, அந்த ஈமக்காடே கீழடியில் வசித்த ஆதிகால மக்கள் பயன்படுத்திய மயான பூமியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அங்கு ஆய்வுகள் நடத்தப்பட்டு, மனித எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டால் அதன் மூலம் கீழடியில் வாழ்ந்த மக்கள் பற்றிய விவரங்கள் தெரிய வரலாம்.
உலக வரலாற்று அறிஞர்கள், ஆதிகால மதுரை நகரை, ‘கீழை நாடுகளின் ஏதென்ஸ்’ என்று வர்ணிக்கிறார்கள்.
காரணம், சிறந்த கடலோடிகளான தமிழர்கள், நீண்ட காலமாக உலகின் மற்ற நாடுகளுடன் முக்கிய வர்த்தக தொடர்பில் இருந்தார்கள்.
வைகை நதி கடலுடன் கலக்கும் இடத்தில் இருந்த துறைமுகம், பல வெளிநாடுகளுக்கு செல்லும் மையமாக செயல்பட்டது.
இங்கு இருந்து தமிழக வணிகர்கள் எகிப்து நாட்டுக்கு செல்வதும், அதன் வழியாக எகிப்தை தாண்டி ரோம் நகர் உள்பட பல மேலை நாடுகளுக்கு செல்வதும் அதிக அளவில் நடைபெற்று இருந்தது.
தமிழகத்தில் கிடைக்கும் மெல்லிய ரக துணி, பட்டுத்துணி, நறுமணப்பொருட்கள், முத்து போன்ற அணிகலன்கள் ஆகியவற்றுக்கு மேலை நாடுகளில் கடுமையான கிராக்கி இருந்தது.
ரோமானியர்கள் அதுபோன்ற சரக்குகளை தங்களிடம் உள்ள தங்க நாணயங்களைக் கொடுத்து பெற்றுக்கொண்டார்கள்.
ஒரு காலத்தில் ரோம் நகரில் உள்ள தங்க நாணயங்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு சென்று விடும் என்று அஞ்சிய ஆட்சியாளர்கள், சில காலம் தமிழக வாணிபத்துக்கு தடை விதித்து இருந்தார்கள் என்பதில் இருந்து எந்த அளவுக்கு வாணிபம் நடைபெற்று இருந்து இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
தமிழர்கள் இங்கு இருந்து வெளிநாடுகளுக்குச் சென்றது போல, பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் வாணிபத்துக்காக இங்கே அடிக்கடி வந்து இருக்கிறார்கள்.
அப்போது தமிழகம் நாகரிகத்திலும் கல்வி, கலாசாரத்திலும் சிறந்து விளங்கியதால், வாணிப நோக்கத்திற்காக வந்த பலர் இங்கேயே தங்கிவிட்டார்கள்.
அதன் காரணமாகத்தான், தமிழகத்தில் நடைபெற்ற ஆய்வுகளின்போது பல வெளிநாட்டினரின் மண்டை ஓடுகள் கிடைத்து இருக்கின்றன.
பொதுவாக மயானங்களை அமைக்கும்போது ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி இடங்களில் மயானங்களை அமைக்கும் பழக்கம் இப்போதும் இருக்கிறது.
அதுபோல பழங்காலத்திலும், ஆட்சியாளர்களுக்கு ஓர் இடத்திலும், நகரின் முக்கியமானவர்களுக்கு ஓர் இடத்திலும், அங்கு வாழ்ந்த வெளிநாட்டினருக்கு தனியாகவும், சாதாரண மக்களுக்கு ஓர் இடத்திலும் மயானங்களை அமைத்து இருந்தார்கள்.
ஆதிச்சநல்லூரில் உள்ள 114 ஏக்கர் மயான பூமியிலும் இதுபோல தனித்தனி மயானங்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அங்கே இதுவரை நடைபெற்ற ஆய்வுகள் வெளிநாட்டினருக்கு உரிய மயான பூமியாக இருந்து இருக்கலாம் என்றும் அதனாலேயே அங்கு ஆஸ்திரேலியர்கள் உள்பட பல நாட்டினரின் மண்டை ஓடுகள் கிடைத்தன என்றும் கூறப்படுகிறது.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகளை ஆய்வு செய்தவர் இலங்கையைச் சேர்ந்த மானிடவியல் அறிஞர் ராகவன் என்பவர் ஆவார்.
தனது ஆய்வு பற்றி அவர் கூறியதாவது:–
ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டை ஓடுகள் மற்றும் பற்களின் அமைப்பு, கொக்கசாய்டு என்ற ஐரோப்பியர் மற்றும் மத்திய ஆசியர்களுடையது. நீக்ராய்டு என்ற கருப்பு நிறத்தினரான ஆப்பிரிக்கர்கள், மங்கோலாய்டு என்ற மஞ்சள் நிறமுடைய சீனா, ஜப்பான், வியட்நாம், கம்போடியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுடையதாக இருந்தன. அவற்றில் கொக்கசாய்டு 35 சதவீதம், நீக்ராய்டு 15 சதவீதம், மங்கோலாய்டு 30 சதவீதம், ஆஸ்திராய்ல்டு 6 சதவீதம், கலப்பினத்தவர் 2 சதவீதம் என்ற அளவில் அங்கே புதைக்கப்பட்டு இருந்தனர்.
இவ்வாறு அவர் கூறுகிறார்.
இதே அளவிலான வெளிநாட்டினர் கீழடியிலும் வாழ்ந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
அங்கு தொடர்ந்து நடைபெறும் ஆய்வுகள் மூலமே இதுபோன்ற அரிய தகவல்கள் வெளியே தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், கீழடியில் அதுபோல ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுமா? அல்லது அந்த இடம் நிரந்தரமாக மூடப்பட்டு, பழங்காலத் தமிழர்களின் நாகரிக வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கானல் நீராகப் போய்விடுமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக ஆகிவிட்டது.
தமிழர்களின் பழங்கால நாகரிக வாழ்வுக்கு பல சான்றுகளைக் கொடுத்த கீழடி, இப்போது பல ரூபங்களில் ஏராளமான சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.
அந்த சிக்கல்கள் என்ன? அதன் மூலம் கீழடி ஆய்வுகள் எதிர்காலத்தில் என்ன ஆகும்? என்பது பற்றிய தகவல்களை, இந்தத் தொடரின் இறுதி அத்தியாயமாக அடுத்த வாரம் வெளியாவதில் காணலாம்.
(நாகரிகம் தொடரும்)