புதுச்சேரி மக்களை பாதிக்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாது நாராயணசாமி திட்டவட்டம்
புதுச்சேரி மக்களை பாதிக்கும் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாது என முதல்–அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கூட்டம் புதுவை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்டு முதல்–அமைச்சர் நாரா
புதுச்சேரி,
புதுச்சேரி மக்களை பாதிக்கும் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாது என முதல்–அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கூட்டம்புதுவை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்டு முதல்–அமைச்சர் நாராயணசாமி வெற்றி பெற்றார். இந்த நிலையில் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் புதுவை தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், பாலன், விஜயலட்சுமி, கீதா ஆனந்தன், தி.மு.க. மாநில அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி. சிவக்குமார், காரைக்கால் மாவட்ட செயலாளர் நாஜிம், ராஷ்டிரீய ஜனதா தலைவர் சஞ்சீவி மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மக்களை பாதிக்கும் திட்டம்இதில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–
நெல்லித்தோப்பு தொகுதியில் தேர்தல் பணியாற்றி மாபெரும் வெற்றியை தந்த அனைவருக்கும்,புதுச்சேரியில் நல்லாட்சி மலர காரணமான மக்களுக்கும், எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். புதுவை மாநிலம் வளர்ச்சி அடைய பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ஆதரவு வழங்க வேண்டும். மத்திய அரசு கொண்டுவரும் மக்களை பாதிக்கும் எந்தவொரு திட்டத்தை புதுச்சேரி அரசு செயல்படுத்தாது.
புதுவை வளர்ச்சி பாதையில் செல்கிறது. இந்த தருணத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் புதுவையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. புதுவையை வளர்ச்சி அடைய நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.